மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாகத் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 28) ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,200 உயர்ந்த நிலையில், இன்று வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் விலை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறையானாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி வாரவிடுமுறையான இன்று தங்கம் கிராமுக்கு 225 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும் சவரனுக்கு 1800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும் விற்பனையாகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாகவே இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 430-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 4,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version