சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசினார். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது எனவும் பழனிசாமி உறுதிப்படத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி பலமானதாக அமையும் அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: புதிய புறநகர் பேருந்து முனையம்.. நவம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்!
திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளோம் எனக் குறிப்பிட்ட பழனிசாமி அதிமுக பொன் விழா கண்ட கட்சி என்பதால் அதை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது என்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.