தமிழக சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மார்ச் – ஏப்ரல் 2026 ல் நடைபெறவுள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக கண்காணிப்பு அலுவலகர்கள் மற்றும் ஆய்வு அலுவலகர்க்கான கூட்டம் அனைத்து இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் / அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி/இடைநிலை /தனியார் பள்ளிகள்) மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான ஆய்வுக் கூட்டமும், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம், இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  மாற்றம் இருக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுக்கு பின்பே தேர்தல் வருதால், தேர்வு பணிகளில் ஆசிரியர் பணியாற்றுவதில் எந்த பாதிப்பு இருக்காது. தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே தமிழகத்தில் பொதுத் தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டன என விளக்கமளித்துள்ளார்.

மேலும், மேல்நிலை தேர்வுகளுக்கு 3,412 தேர்வு மையங்களிலும், மேல்நிலை முதலாம் ஆண்டுப்  தேர்வுகளுக்கு 2,615 தேர்வு மையங்களிலும் மற்றும் பத்தாம் வகுப்பிற்கு 4,219 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 17,61,528  தேர்வர்கள் 2025 – 2026ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர் என்றும் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version