சென்னை சென்டிரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு மின்சார ரெயில்கள் இன்று மற்றும் மே 17-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பகுதிகள்:
பொன்னேரி – கவரப்பேட்டை இடைப்பட்ட ரெயில் பாளங்கள் பராமரிக்கப்படுவதால், சென்னை சென்டிரல், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை, ஆவடி, என பல வழித்தடங்களில் பயணிகள் பாதிக்கப்பட உள்ளனர்.
ரத்து செய்யப்படும் முக்கிய ரெயில்கள்:
சென்னை சென்டிரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் (காலை 10:30, 11:35 மற்றும் மதியம் 1:40)
கும்மிடிப்பூண்டி–சென்னை சென்டிரல் ரெயில்கள் (மதியம் 1:00, 3:45)
சூலூர்பேட்டை வழித்தட ரெயில்கள் (சென்னையிலிருந்து காலை 5:40, 10:15, 12:10)
சூலூர்பேட்டியில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரெயில்கள் (மதியம் 12:35, 1:15, 3:10)
கடற்கரை–கும்மிடிப்பூண்டி (மதியம் 12:40, 2:40)
நெல்லூர்–சூலூர்பேட்டை இடையே ஓடும் ரெயில்கள்
ஆவடி–சென்டிரல் அதிகாலை ரெயில் (4:25am)
சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு:
பயணிகளின் வசதிக்காக, சில மாற்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன:
பொன்னேரி–சென்னை சென்டிரல் (மதியம் 1:18)
சென்னை சென்டிரல்–மீஞ்சூர் (காலை 11:35, மதியம் 1:40)
சென்னை கடற்கரை–எண்ணூர் (மதியம் 12:40)
எண்ணூர்–சென்னை சென்டிரல் (மதியம் 3:56)
இந்த நாட்களில் பயணம் திட்டமிடுவோர், ரெயில்வே அதிகாரபூர்வ தகவல்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளும்படி தெற்கு ரெயில்வே கேட்டுக்கொள்கிறது. பயணத்தின்போது சிக்கல் ஏற்படாமல் இருக்க, தற்காலிக மாற்றங்களுக்கு பயணிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.