ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 2011 ஆம் ஆண்டு மோசடி நடைபெற்றது. இதை நம்பி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்களில் முதலீடு செய்தனர்.

ஆயிரக்கணக்கானோரிடம் முதலீடுகளை பெற்றுக் கொண்ட சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமி , பணத்தை கொடுக்காமல் மோசடி செய்தார். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவில் பதியப்பட்டது.

இதில் சேலத்தில் பதியப்பட்ட வழக்கில் 385 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பானது வழங்கப்பட்டது.

மோசடி செய்த ஈமு கோழி உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அபராதமாக 7 கோடியே 89 லட்சம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையினை மேல்முறையீட்டு காலம் முடிந்த பின்னர் 385 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version