கலைஞர் தனது இறுதிக்காலத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார் என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தோல்வி பயத்தில் இத்தகைய அவதூறுகளைப் பரப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை. அரசியல் நாகரிகம் கருதியே எம்ஜிஆர், ஜெயலலிதா சிகிச்சை குறித்து நாங்கள் பேசுவதில்லை. கலைஞரின் சிகிச்சை விவரங்கள் வெளிப்படையானவை; அவரைப் பற்றி அவதூறு பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்” என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், கலைஞர் தனது தந்தை மட்டுமல்ல கோடிக்கணக்கான தொண்டர்களின் தலைவர். முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைஞர் கருணாநிதி குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம். கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசினால் திமுக தொண்டனாக பார்த்து கொணடிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
