எழிலகத்தின் ஆவின் பாலகத்தில் பணியாற்றிய ஊழியர் பணி நீக்கம், காலாவதியான ஆவின் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – ஆவின் நிர்வாகம்
தமிழகத்தில் வாரம் இருமுறை ஆவின் பாலகத்தின் பொருட்களை ஆய்வு மேற்கொள்ளவும் ஆவின் மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவு
சென்னை எழிலகத்தில் செயல்படக்கூடிய ஆவின் பாலகத்தில் மணிகண்டன் என்பவர் மோர் பாக்கெட்டை வாங்கி குடித்துள்ளார் அப்போது அதிக புளிப்புடன் இருந்தவுடன் காலாவதியான தேதியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்
மோர் பாக்கெட்டு காலாவதியான தேதி முடிவடைந்தும் அரசு ஊழியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய சென்னை எழுலகத்தின் ஆவின் பாலகத்தில் காலாவதியான மோர் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டது
மணிகண்டனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் எழிலகத்தின் ஆவின் பாலகத்தின் உரிமையாளர் மீதும் அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளித்தார்
புகாரின் அடிப்படையில் ஆவின் நிர்வாகம் இதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
மேலும் ஆவின் தரப்பில் சம்பந்தப்பட்ட ஆவின் பாலகத்தின் பணியாற்றிய ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் காலாவதியான ஆவின் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், தமிழகத்தில், வாரம் இரு முறை ஆவின் பாலகத்தின் பொருட்களை ஆய்வு மேற்கொள்ளவும், தவறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆவின் மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.