திருவாரூர் கடைத்தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி திருவாரூர் வர்த்தகர்கள் திடீர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள் பேருந்து நிலையங்களைச் சுற்றி 500 மீட்டர் தூரம் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடஉத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் 2 கடைகள் , திருத்துறைப்பூண்டியில் 2 கடைகள் , திருவாரூரில் 1 கடைகள் மூடப்பட்டது.
இதில் திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி வர்த்தகசங்கத்தினர் வர்த்தக சங்கத்தலைவர் பாலு தலைமையில் திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன், வட்டாட்சியர் இளங்கோவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடை முன்பே வட்டமாக அமர்ந்து மது அருந்துவதால், பொதுமக்கள், வர்த்தகர்கள் நடமாட அச்சம் உள்ளதாகவும், அவர்களைக் கேள்வி கேட்டால் தாக்க வருவதால் உயிர்ப்பயம் ஏற்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நாளை (மே 20) மாவட்ட நிர்வாகம் , டாஸ்மாக் மேலாளர் , வர்த்தகர்கள் என பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
பின்னர் திருவாரூர் வர்த்தகர்கள் கலந்து கலைந்துசென்றனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது ,

