சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். அதே பகுதியில் உள்ள ராமசந்திரன் தெருவில் கார்கள் பழுது பார்க்கும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று (27.05.2025) இரவு வழக்கம் போல் குடோனை மூடிவிட்டு சென்ற நிலையில் இன்று (28.05.2025) அதிகாலை திடிரென குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக உரிமையாளர் குமரேசனுக்கு தகவல் அளித்த நிலையில், குடோனை திறந்து பார்த்தபோது, பழுது பார்பதற்காக வைக்கபட்டிருந்த சுமார் 7 கார்கள் மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குமரேசன் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அனைத்தனர்.

ஆனால் அதற்க்குள் ரூ.1கோடி மதிப்புள்ள கார்கள் மற்றும் பொருட்கள் தீயில் கருகின. தகவல் அறிந்து வந்த போலீசார் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version