Close Menu
    What's Hot

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடரும்… பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ரயில் மறியல்…
    தமிழ்நாடு

    மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடரும்… பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ரயில் மறியல்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 19, 2025Updated:August 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபடவுள்ளனர்.

    61 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55-க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் பிரச்சனை இன்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தங்கச்சி மடத்தில் இன்று அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர். மாலை 3 மணியளவில் தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நேற்று மாலை ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ ராஜமனோகரன் தலைமையில் மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததால், திட்டமிட்டபடி இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப் போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டமும் தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசூடுபிடிக்கும் துணை குடியரசுத் தலைவர் போட்டி… ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்…
    Next Article வெள்ளக்காடான மும்பை… வரலாறு காணாத கனமழையால் மக்கள் அவதி…
    Editor TN Talks

    Related Posts

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025

    13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    December 25, 2025

    “பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    December 25, 2025

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    December 25, 2025

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.