சென்னையில் இன்று (மே 12) ஆபரணத் தங்கத்தின் விலை  அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,840 அதிகரித்து ரூ.1,14,640 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக மந்த நிலையில் இருந்த சந்தையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், இன்று அதற்கு நேர்மாறாக விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருப்பது நடுத்தர மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் விலை குறைந்து வந்ததால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள், இன்றைய அதிரடி ஏற்றத்தைக் கண்டு நகைக்கடைகளுக்குச் செல்லத் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.தமிழகத்தில் திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், தங்கத்தின் இந்த “தாறுமாறு” விலை உயர்வு சாமானியர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version