Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோகுல்ராஜ் வழக்கில் வாதாடிய வழக்கறிஞருக்கு அரசு இன்னும் சம்பளம் தரலயாம்..
    தமிழ்நாடு

    கோகுல்ராஜ் வழக்கில் வாதாடிய வழக்கறிஞருக்கு அரசு இன்னும் சம்பளம் தரலயாம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025Updated:June 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cb65fb52f8c0d6b1879c5a48a501b7d5 original
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை மூன்று வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இதில் யுவராஜ் உள்பட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மற்ற இருவரின் தண்டனையைக் குறைத்து தீர்ப்பளித்தது.

    இந்த கொலை வழக்கில், மதுரை நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டிருந்தார். உயர் நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞராக வாதங்களை முன் வைத்தார்.

    சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணம், இதுவரை வழங்கப்படவில்லை எனவும், கட்டணத்தை வழங்கக் கோரி அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, ப.பா.மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் மோகனின் கோரிக்கை மனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் கட்டணம் வழங்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்த நீதிபதி, மூன்று வாரங்களில் அவருக்கான கட்டணத்தை வழங்க உத்தரவிட்டார். கட்டணம் வழங்கியது குறித்து ஜூன் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாவோயிஸ்ட் கூட்டாளிகள் எங்கே ? கோவையில் ஆறு பேருக்கு NIA வலை வீச்சு!
    Next Article தங்க நகைக்கடன் – நிபந்தனைகளில் தளர்வு
    Editor TN Talks

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.