கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும், 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும், நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500-க்கும், சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version