சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை  (பிப்.20)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கும், சவரன் ரூ.640 ரூ. 1,15,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (பிப்.21)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ260 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,680க்கும், ரூ.2,080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,17,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 அதிகரித்து ரூ.2 லட்சத்து 90,000க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.290க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version