உங்ககிட்ட இப்போ ஒரு 500 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ கண்டிப்பா நீங்க உஷாரா இருக்கணும்.. ஏன் என்றால் அது கள்ள நோட்டாகக் கூட இருக்கலாம்.

மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த பின்பு புதிதாக வெளியிட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் உயர்தர பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட நோட்டுகளாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது

இருப்பினும், இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. கள்ள நோட்டுகளையும் கருப்பு பணத்தையும் ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது புதிய 200 ரூபாய் நோட்டுகளின் கள்ள நோட்டுகளின் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.

போலி ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படும் மையின் நிழல், எழுத்துக்களின் வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் அசல் 200 ரூபாய் நோட்டுடன் மிகவும் ஒத்திருக்கும் வகையில் இந்த போலி நோட்டுகள் உலா வருகின்றனர். அச்சு அசல் போல் இருக்கும் போலி ரூபாய் நோட்டுகள் தமிழகத்தின் சில இடங்களில் உலா வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோட்டில் போலி ரூ.500 கும்பல் பிடிபட்டனர். அந்தவகையில் தற்போது தருமபுரியில் போலி 200 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி, நாட்டாண்மைபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 49; பைக் கன்சல்டிங் நிறுவனரான இவர், கடந்த பிப்., 18ல், தர்மபுரி டவுனில் உள்ள, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளையில், அவருடைய வங்கி கணக்கில் செலுத்த, 23,000 ரூபாய் கொடுத்துள்ளார். அப்போது, பணம் எண்ணும் இயந்திரத்தில் செலுத்தியபோது, 24 எண்ணிக்கையிலான, 200 ரூபாய் நோட்டுகள் மட்டும் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தன.

இதையடுத்து, நடத்திய ஆய்வில், அந்த ரூபாய் நோட்டுகள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி மேலாளர், தர்மபுரி டவுன் போலீசில் அளித்த புகாரின்படி, வடிவேல் நேற்று, கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பைக் வாங்கியவர் கொடுத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய, வடிவேல் வந்துள்ளார். இதுகுறித்து விசாரித்த போது, பைக் வாங்கியவர், போலியான முகவரி கொடுத்தது தெரிந்தது. அந்த நபர் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version