சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் (டிச. 27) வரலாறு காணாத வகையில் ரூ.1,04,800க்கு விற்பனையானது.

அதன்படி, நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்து, ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் விற்பனையனது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258-க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ஒருகிலோ ரூ.2,58,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version