ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தையும், இந்தியர்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்த ஒன்று. தங்கள் சேமிப்பை தங்கமாக மாற்றும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உலகின் வேறேந்த நாட்டை விடவும் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
