Close Menu
    What's Hot

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»உலககோப்பை கால்பந்து போட்டிகள்.. நவீன வசதிகளுடன் தயாராகும் மெக்சிகோ மைதானம்
    விளையாட்டு

    உலககோப்பை கால்பந்து போட்டிகள்.. நவீன வசதிகளுடன் தயாராகும் மெக்சிகோ மைதானம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    126427707 gettyimages 1171295239
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலககோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் 16 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 48 நாடுகள் இதில் பங்கேற்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் நாடுகள் தவிர எஞ்சிய நாடுகள் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றே பங்கேற்க முடியும்.

    இதுவரை நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் ஆசிய கண்டத்தில் இருந்து ஜப்பான், ஈரான், தென்கொரியா, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் ஆகிய நாடுகள் தேர்வாகி உள்ளன. சவுதி அரேபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் தேர்வாகி உள்ளது. அந்த கண்டத்தில் இருந்து நியூசிலாந்தும் உலக கோப்பையில் களம் காண்கிறது. தென்அமெரிக்க நாடுகளில் இருந்து நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள பிரேசில், ஈகுவடார் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    உலக கோப்பை தொடரின் தொடக்கப் போட்டி உள்பட மொத்தம் 5 போட்டிகள் மெக்சிகோவின் புகழ்பெற்ற அஸ்டெக் நகர மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அந்த அரங்கம் நவீன வசதிகளுடன் மெருகேற்றப்பட்டுள்ளது.

    மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன. மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

    அடுத்த ஆண்டு ஜுன் மாதம் 11-ந் தேதி தொடங்கி ஜுலை மாதம் 19-ந் தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ. 74,360-க்கு விற்பனை
    Next Article ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்.. போர்பதற்றம்..
    Editor TN Talks

    Related Posts

    2027 ஐபிஎல் தொடரை தவிர்க்கிறாரா பேட் கம்மின்ஸ்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

    June 3, 2026

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    June 3, 2026

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.