சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,560 குறைந்து சவரன் ரூ.68,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880-க்கும், ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.8,610-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ந்து 3 வாரங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.5,000-க்கும் மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.