சென்னையில் இன்று (டிசம்பர் 22) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தினம் (டிசம்பர் 20), 20 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 400க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 229 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.226க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோவிற்கு 5000 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்து காணப்பட்டது.
