சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாகச் சரிந்து, சவரனுக்கு ரூ2,720 வரை குறைந்திருந்தது. இது நகை வாங்குவோரிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது

ஆனால் இன்று மாலை  மீண்டும் விலை எகிறியது. சவரனுக்கு ரூ2,000 வரை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,750-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேற்காசிய நாடுகளில் போர் நிறுத்த அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை மாற்றத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலையில் விலை உயர்ந்த நிலையில், இன்று காலை மீண்டும் குறைந்ததால் இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்காமல் சில மணி நேரங்களிலேயே விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையே இந்தத் திடீர் மாற்றங்களுக்குக் காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version