சென்னையில் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, தற்போது அதிரடியாக குறையத் தொடங்கியுள்ளது. இன்று (ஏப்ரல் 24) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.14,100க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு காரணமாக, உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை சரிவைச் சந்தித்து வருவது நகைப்பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை தடாலடியாக சவரனுக்கு ரூ.2,000 வரை குறைந்துள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த விலை, தற்போது குறையத் தொடங்கியுள்ளதால், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், சர்வதேச அரசியல் சூழல் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் தங்கத்தின் விலையில் இத்தகைய மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

