தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,720க்கும் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி, 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,845க்கும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176க்கும், ஒரு கிலோ ரூ.1,76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version