செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறியது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா, மருத்துவமனை, மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து வருகிறது. குறிப்பாக, ஏரியின் நீர்வரத்து கால்வாய்களான கிருஷ்ணா கால்வாய், பங்காரு கல்வாய், சவுத்திரி கால்வாய் வழியாக அதிக அளவில் கழிவு நீர் ஏரியில் கலப்பதாகவும், தமிழக அரசின் நீர்வளத்துறையினர், இதனை கண்காணித்து தடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வு, செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தவறியது தொடர்பாக தமிழக அரசு, இருங்காட்டுக் கோட்டை சிப்காட் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Share.
Leave A Reply

Exit mobile version