மிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், ஜூலை 1 முதல் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது.

வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஜூலை 3 வரை பகல் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக்கல்லாரில் 9 செ.மீ. மற்றும் புதுக்கோட்டை வெண்ணாவல்குடியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் 40°C வெப்பநிலை பதிவான நிலையில், கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 12.9°C வெப்பநிலை பதிவானது.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version