முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதற்கு பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார, சென்னை மாநகர போக்குவரத்து முன்னாள் மேலாண் இயக்குநர் கே.கணேசன் உளள்ளிடோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கை தள்ளிவைக்கக்கோரி சென்னை மாநகர போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்குநர் கே.கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version