2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ முடிவெடுக்கவில்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் உடன் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் கைலாசபட்டி பண்ணை வீட்டில் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,  அதிமுக தொண்டர்களின் உரிமைகளை பெறுவதற்கு நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.” என்றார்.

தனிக்கட்சி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தேவையற்ற குழப்பங்களை மக்களிடம் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர்,  “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் இணைய வேண்டும் என்பது டிடிவியின் ஆசை. ஒன்று சேர நான் ரெடி. அதிமுகவில் சேர்க்க டிடிவி தினகரனும் அவரது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா என்பதை கேட்டுச்சொல்லுங்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே அதிமுக பாஜக கூட்டணியில் ஓ.பி.எஸ். இணையப்போவது உறுதியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version