2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தேர்தல் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் சீல் வைத்து பாதுகாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள இவிஎம் எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என இன்று முதல் ஒரு மாதம் ஆய்வு செய்யப்படுகிறது. சென்னையில் மொத்தம் 6,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 250 முதல் 300 இயந்திரங்களை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ​முதலில் இயந்திரங்கள் சேதங்கள் அல்லது பழுதுகள் உள்ளதா என சரிபார்க்கப்படும் ​பிறகு, இயந்திரங்களைத் திறந்து உள்ளே ஏதேனும் பொருட்கள் ஒட்டி இருக்கிறதா என ஆய்வு செய்யப்படும். ஆய்வினை பெல் (BEL) நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 20 பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தினால் சென்னை மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் கருவி விவிபேட்) உள்ளிட்ட 27 ஆயிரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனை சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் வைப்பட்டது. இதனை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆய்வு செய்தார். இதில் பெல் நிறுவன அதிகாரிகள் வருகை தந்து. வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனை செய்யும் கருவியுடன் ஆய்வு செய்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். திமுக, அதிமுக, விசிக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் முன்னிலையில் இவிஎம் எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்யப்படுபட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை ஆய்வு நடக்கும் இடத்தில் இருக்கலாம் எனதெரிவித்துள்ளார். இதேபோல், முதற்கட்டமாக இந்த பணிகள் முடிந்ததற்கு பின்பாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் அதை நாங்கள் முன்வைப்போம் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூறினார்

திரும்பப் பெறப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களில் சுமார் 70 சதவீதம் பெறப்பட்டது, மீதமுள்ளவை கண்டுபிடிக்க முடியாததால் ‘இடமாற்றம் செய்யப்பட்டவை’ (Shifted) எனக் குறிக்கப்பட்டுள்ளன, வாக்காளர் பட்டியல் குறித்த முழு விவரங்கள் அனைத்தும் டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மொத்தம் 6,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொகுப்புகள் (கட்டுப்பாட்டுப் பிரிவு (CU), வாக்குப்பதிவுப் பிரிவு (BU), மற்றும் VVPAT) ஆய்வு செய்யப்படவுள்ளன என்றார். ​அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளே அனுமதிக்கப்படுவர். ​ஆனால், கேமராக்கள் அல்லது மொபைல் போன்கள் உள்ளே அனுமதிக்கப்படாது என்றார். ​பெல் பொறியாளர் மட்டுமே ஸ்கேனிங் செய்வதற்காக ஒரு கேமரா ஃபோனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். ஏற்கெனவே பதிவான வாக்குகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டு, இயந்திரங்கள் (Resetting) செய்யப்படும் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version