இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் போர் நிறுத்தம் வெளியாகும் என செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேல்தான் ஈரான் மீது போரைத் தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். தற்போதைக்கு போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியதால், நாங்களும் நிறுத்திவிட்டோம்,” என்று அராக்சி கூறினார்.

இருப்பினும், ஈரானின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடைசி நிமிடம் வரை போராடிய ஈரானிய ஆயுதப் படைகளுக்கும் அப்பாஸ் நன்றி தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version