தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயை, ஜாக்டோ – ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயை, ஜாக்டோ – ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்க் கழகம்) தலைமையிலான நிர்வாகிகள் நேற்று(13.06.2025) மாலை சந்தித்துப் பேசினர்.

அந்தச் சந்திப்பில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைச் செயல்படுத்தாமல், கடந்த நான்காண்டுகளாகத் திமுக அரசு ஏமாற்றி வருவதைக் கண்டித்தும் அதை உடனடியாகச் செயல்படுத்தத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வரும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்குத் தமது முழு ஆதரவை அளிப்பதாக விஜய் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version