தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். குழந்தை நட்சத்திரம், நடனக் கலைஞர், உதவி இயக்குநர் என வளர்ந்து நடிகராக தனனை நிலைநிறுத்திக்கொண்டார். இதுதவிர அரசியலில் கால்பதித்த கமல், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கினார். தற்போது மாநிலங்களவை எம்.பி.ஆக உள்ளார்.
இந்தநிலையில் கேரளாவில் நடைபெற்ற ஹோர்டஸ் ஆர்ட் அண்ட் லிடரேச்சர் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலிடம் சினிமா மற்றும் அரசியல் பயணம் குறித்து எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. தற்போது நீங்கள் ராஜ்ய சபா எம்பியாக இருக்கிறீர்கள் ,இந்த தருணத்தை எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு கமலஹாசன் ராஜ்யசபா எம்பியாக நான் என்னுடைய முதல் கையெழுத்தை போடும்போது என்னுடைய பெற்றோர் தான் நினைவுக்கு வந்தனர் என கூறியுள்ளார்.
அதாவது, நான் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவன். குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், ரயில்வேயில் அரசு வேலை கிடைத்திருக்கும் என்று என் அம்மா எப்போதும் என்னிடம் கூறுவார், எனக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று என்னுடைய தாயாரின் கனவை நான் என்னுடைய 71 வயதில் தான் நிறைவேற்றி இருக்கிறேன், இந்த தருணத்தில் என்னுடைய தாயாரை அழைத்து எனக்கு அரசாங்க வேலை கிடைத்து விட்டது என கூற வேண்டுமென நினைக்கிறேன் ஆனால் இப்போது முடியாது என்று அவர் பேசியுள்ளார். மேலும், தான் எப்போதும் விரும்பியது போலவே, மக்களுக்கு சேவை செய்வதில் பெருமைப்படுவதாகவும் கமல் குறிப்பிட்டார்.
