கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இரு பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

கரூர் வேலாயுதபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெகவின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் பேசிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. விஜய்க்கும், தவெக கட்சிக்கும் எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இது நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை ஆவணங்களை உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றம் குறிப்பிட்ட சிறப்பு புலனாய்வு குழு தங்களின் விசாரணையை தொடங்க உள்ளன.

இந்த குழுவில், சியாமளா தேவி, விமலா என்ற இரு பெண் எஸ்.பி.க்களும், 3 ஏடிஎஸ்பிக்கள், இஸ்பெக்டர்கள் மற்றும் சப் இஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கரூர் போலீசாரின் விசாரணை ஆவணங்களை பெற்று கொண்டு தங்களின் விசாரணையை தொடங்க உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version