கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கூடுதலாக இல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இரவு நேரங்களில் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை எனவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து பதிவு வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கிளாம்பாக்கத்தில் நடந்த சம்பவம் என்ன எவ்வளவு பேருந்துகள் தினசரி இயக்கப்படுகிறது இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் கூடுதல் பேருந்துகளை இயக்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Share.
Leave A Reply

Exit mobile version