Close Menu
    What's Hot

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் கட்டு, கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள் : வாலிபர் கைது – நான்கு பேர் தப்பி ஓட்டம்
    தமிழ்நாடு

    கோவையில் கட்டு, கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள் : வாலிபர் கைது – நான்கு பேர் தப்பி ஓட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 09 103940
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவரிடம் 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. ஆனால் கள்ள ரூபாய் நோட்டுக்கள் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டு இருந்தது. கள்ள ரூபாய் நோட்டுகளின் இடையில் வெற்று தாள்கள் சொர்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து அந்த ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரியை சேர்ந்த இளவரசன் என்பதும், அவர் கருமத்தம்பட்டி சாரதா மில் சாலை அருகே ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவருடைய வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கும் கட்டு, கட்டாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. அதில் 13 பண்டல்கள் 2,000 ரூபாய் நோட்டுகள் 5 பண்டல்கள் 5,00 ரூபாய் நோட்டுகள் மற்றும் வெட்டப்படாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் 12 பண்டல்களும், வெட்டப்படாத 5,00 ரூபாய் நோட்டு பண்டல்கள் 13 இருந்தன. அவற்றையும் அதிநவீன பிரிண்டர்கள் செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    ரூபாய் 50 ஆயிரம் அசல் ரூபாய் நோட்டு கொடுத்தால், ரூபாய் 2 லட்சம் மதிப்பு உள்ள கள்ள நோட்டுக்கள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இரட்டிப்பு பணம் தருவதாக, கூறி ஒரு பக்கமாக மட்டும் ரூபாய் நோட்டு வடிவில் அச்சடித்து மோசடி செய்ய முயன்று உள்ளனர். எனவே இளவரசனை காவல் துறையினர் கைது செய்தனர்.

    திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அய்யம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமாரிடம் மோசடி செய்ய முயன்ற போது இளவரசன் காவல் துறையிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு அவருக்கு உடனடியாக இருந்த உதயகுமார், தயா என்ற குமரேசன், லோகநாதன் செந்தில் ஆகிய நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

    இரண்டு கோடி ரூபாய் என மதிப்பிடத்தக்க அளவுக்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதலைப்பு வைக்க என்னிடம் கேட்டால் என்ன? – வைரமுத்து
    Next Article மேற்குமாவட்டங்களில் தொடரும் கொலை-கொள்ளை: திமுக அரசு எதை செய்தது? – இபிஎஸ் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.