Close Menu
    What's Hot

    திரைக்கதை எழுதுவதில் முடிசூடா மன்னன் ‘பாக்யராஜ்’..!! தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

    மத்திய கேபினெட்டில் மாற்றம்..!! நிர்மலாவுக்கு பதில் நிதி துறையை ஏற்கிறாரா சக்திகாந்த தாஸ்?

    ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
    தமிழ்நாடு

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    Editor web3By Editor web3April 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvk one year 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள்.

    அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.

    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!

    வாகை சூடும் வரலாறு திரும்புகிறது!

    நல்லதே நடக்கும்!

    வெற்றி நிச்சயம்! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!
    Next Article RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்!. தனியரசு கடும் விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!

    June 27, 2026

    தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் கே.பாக்யராஜ் ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

    June 27, 2026

    இஸ்லாமை தழுவியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து சமூகநீதிக்கு எதிரானது – பேராசிரியர் ஜவாஹிருல்லா அதிருப்தி

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரைக்கதை எழுதுவதில் முடிசூடா மன்னன் ‘பாக்யராஜ்’..!! தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

    மத்திய கேபினெட்டில் மாற்றம்..!! நிர்மலாவுக்கு பதில் நிதி துறையை ஏற்கிறாரா சக்திகாந்த தாஸ்?

    ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!

    தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் கே.பாக்யராஜ் ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

    ஒரே மாதத்திற்குள் 2 ராஜாக்களை இழந்து விட்டது நம் தமிழ் சினிமா..!! கமல்ஹாசன் உருக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.