பருவமழையின் தாக்கம் பெரிதாக இல்லையெனில் நவம்பர் மாதத்திற்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் சுமார் 414 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து முனையத்தில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் தனித்தனியாக வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
41 கடைகள், எட்டு டிக்கெட் கவுண்ட்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிவறைகள், 1,800 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்தும் வசதியுடன் மாநிலத்தின் முதல்முறையாக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதியோடு இந்தப் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்.. 8 மீனவர்களுக்கும் 8ஆம் தேதி வரை சிறை!
இந்நிலையில் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு நேற்று மாலை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் மாதத்துக்குள் இந்தப் பேருந்து முனையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.