வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம், சேம நல நிதி உயர்வு, உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். போலி வழக்கறிஞர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விரைவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞர்கள் பணியை மேற்கொண்ட 30க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.மேலும் இந்த கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், சேமநல நிதியை 10 லட்சத்தில் இருந்து உயர்த்தி தர வேண்டும், என மத்திய அரசிற்கும், தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், இளம் வழக்கறிஞர்கள் பயிற்சி மேற்கொள்ள தமிழகத்தில் இரண்டு இடங்களில் பயிற்று அரங்கம் உருவாக்க வேண்டும், உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் போலி வழக்கறிஞர்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மிக விரைவில் இந்திய அளவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version