மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் மறைந்த முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முதலமைச்சரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து மு.க.அழகிரி பேசுகையில், “மதுரை முன்னாள் மேயர் முத்து, திமுகவின் வளர்ச்சிக்கு அதிகம் உதவியவர். அத்தகைய பெருமைக்குரிய முத்துவுக்கு என்னுடைய தம்பி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சிலை திறக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
திமுகவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய முத்துவுக்கு சிலை திறக்கும் நிகழ்வு, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.