இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே தடை செய்யப்பட்ட தூவல் நீர்வீழ்ச்சியில்,

செல்ஃபி எடுக்கும் போது கால் வழுக்கி பாறையில் தொங்கிய மதுரை வாலிபர்.

கயிறு மூலம் உயிரோடு மீட்ட அப்பகுதி மக்கள் .

வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே, தடை செய்யப்பட்ட தூவல் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்கும் போது கால் வழுக்கி பாறையில் தொங்கிய மதுரையை சேர்ந்த வாலிபரை அப்பகுதி மக்கள் கயிறு மூலம் உயிரோடு மீட்டனர்.

தமிழத்தின் மதுரையில் இருந்து சனிக்கிழமையான நேற்று (07.06.25) மாலை நான்கு பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் ராமக்கல்மேடு வந்த அவர்கள், அருகில் உள்ள தடை செய்யப்பட்ட தூவல் அருவிப் பகுதிக்கு சென்று விழிம்பில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர்.

அதில் ஒருவர் கால் வழுக்கி அருவி நீர் வழிந்து செல்லும் பாறையை பிடித்தவாறு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

தகவல் அறிந்த உள்ளூர்வாசிகள் கயிறு மூலம் மதுரை இளைஞரை உயிருடன் மீட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 12 பேர் இந்த தூவல் அருவியில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, எப்போதும் ஈரப்பதத்துடன் வழுக்கல் நிறைந்துள்ளதால், தூவல் அருவி மற்றும் சுற்றுப்புறங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருந்த போதும் தடையை மீறி குளிக்க முயன்று மதுரையைச் சேர்ந்த இளைஞர்,வழுக்கி பாறை இடுக்கில் விழுந்து சிக்கித் தவித்து வந்த நிலையில்,அவர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version