தமிழக அரசியலில் கூட்டணி மற்றும் சந்திப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய நகர்வாக அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணியை நேரில் சந்தித்தார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக,எஸ்.பி. வேலுமணி,நத்தம் விஸ்வநாதன் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் வாசலுக்கே வந்து முதலமைச்சரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் முதலமைச்சருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி. சண்முகம் அணி என இரு துருவங்களாகக் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் நேரடியாக சி.வி. சண்முகத்தைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
