திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை  இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வங்கக் கடலோரம் சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்து, முருகப்பெருமான் மக்களைக் காத்து அருள்பாலித்த புண்ணிய பூமி திருச்சீரலைவாய். வேண்டி விரதம் இருந்து மனமுருகிக் கேட்கும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்புரியும் நம் வேலவன் எனவும்,

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சூழ்ந்திருக்கும் இருள் நீங்கி, மக்களின் துயர் அகன்று வாழ்வு செழிக்கவும், அடுத்த ஆண்டு மக்கள் விரும்பும் நல்லாட்சி மலரவும் முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் எனவும் அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version