தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை முடிவடைகிறது. இதனால் நாளை காலை கூடும் சட்டமன்றக் கூட்டத்தொடர் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் அவர்கள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைக்கவும், கட்சித் தலைமையின் உத்தரவை முறைப்படி அமல்படுத்தவும் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ சபரிநாதன் அவர்கள் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கொறடா நியமனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட சபரிநாதன், 76092 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா வீழ்த்தி எம்.எல்.ஏ. ஆகினார். இவர், விஜய்யிடம் சுமார் 30 ஆண்டுகளாக ஓட்டுநராகவும், தற்போது தனிப்பட்ட உதவியாளராகவும் (Personal Assistant) பணியாற்றி வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் தான் இந்த சபரிநாதன்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version