மகளிரை சுயதொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் ‘மோடியின் தொழில் மகள்’ என்ற பெயரில் பாஜக புதிய திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது.
இதன் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோதியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, 75 ஓவியங்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சி கோவை கணபதி வாஜ்பாய் திடலில் இன்று துவங்கப்பட்டது.
கண்காட்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சேலஞ்சர் துறை ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறு வயது முதல் பிரதமர் பொறுப்பு ஏற்றது வரையிலான பல்வேறு ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மோடியின் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்கான ஆதரவு, சூரிய மின் உற்பத்தி திட்டங்கள், வேளாண்மை மேம்படுத்துவதற்கான திட்டம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சர்வதேச நாடுகள் உடனான நட்புறவு ஆகியவற்றை குறிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியினை பொதுமக்கள் பலர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும், மோடியின் தொழில் மகள் பயிற்சி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள மோடி தொழில் மகள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அந்நிகழ்வில் மகளிரை சுயதொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் பல்வேறு தொழில் செய்வதற்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.