முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.15 அடியாக உயர்ந்துள்ள நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட உள்ளது. நீர் இருப்பு 6155 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3720 கன அடியாகவும் உள்ள நிலையில், தமிழக பகுதிக்கு விநாடிக்கு 2100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று பிற்பகல் 12 மணிக்கு, முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவுக்கு விநாடிக்கு 250 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 1500 கன அடியாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கேரளாவின் பெரியாற்றின் கரையோரம் அமைந்துள்ள வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, உப்புத்தரா, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் “ரூல் கர்வ்” முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூன் 30 வரை 136 அடிக்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதால், வேறு வழியின்றி கேரளாவுக்கு நீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நீர் திறப்பால் கேரளாவின் தாழ்வான பகுதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உங்களின் கருத்து என்ன?