முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது.தற்போது நீர்வரத்து வினாடிக்கு 6084 கன அடியாகவும், நீர்மட்டம் 134.30 அடியாகவும் உள்ளது.

ரூல் கர்வ் முறைப்படி ஜூன் 30-ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிவரை மட்டுமே நீர் தேக்க முடியும்.

இன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்ட கூடும் என்பதால், அணையில் இருந்து வல்லக்கடவு வழியாக கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால்,தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் இருந்து கேரளாவிற்கு முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version