டேங்கர் லாரியிலிருந்து வெளியாகி வரும் 16,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் – பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தனர்.

தூத்துக்குடியில் இருந்து கரூர் செல்வதற்காக 16,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரியை திருநெல்வேலியை சேர்ந்த மகேஷ் ஒட்டி வந்துள்ளார். திண்டுக்கல் ஆத்தூர் பகுதியிலுள்ள தோமையார்புரம் அருகே வந்தபோது டேங்கர் லாரியில் ஓட்டை ஏற்பட்டு லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேற தொடங்கியுள்ளது.

உடனடியாக டிரைவர் வண்டியை நான்கு வழிச்சாலையின் ஓரம் நிறுத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியிலிருந்து வெளியேறி வரும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் மீது தண்ணீர் அடித்தனர்.

இந்த ஹைட்ரோ குளோரிக் ஆசிட் தீ பற்றாது என்றாலும் இதனால் வெளியேறும் புகை பொதுமக்களுக்கு மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் இதன் வீரியத்தை குறைக்கும் நோக்கில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளிவந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் அடித்தனர். இருந்த போதும் அப்பகுதி சிறிதுநேரம் புகைமூட்டமாக காணப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version