திரையரங்குகளுக்குச் சென்று படங்கள் பார்த்தது அந்த காலம். எந்த ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடுவது இந்த காலம். அப்படிப்பட்டவர்களுக்காக, இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்ற பட்டியலை பார்க்கலாம்.
சன் நெக்ஸ்ட்டில் தமிழில் வெளிவந்த தி வெர்டிக்ட், தெலுங்கில் வெளிவந்த ஒக்க பதக்கம் பிரகாரம், மராத்தி மொழியில் வெளிவந்த ஆசாதி படங்கள் வெளியாகி உள்ளன.
நெட்பிளிக்சில் இந்தியில் வெளிவந்த ரெய்டு-2, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் அடித்த கொரிய மொழியில் வெளிவந்த ஸ்குவிட் கேம்-3, ஆங்கிலத்தில் வெளிவந்த ட்ரெய்ன் ரெக் பூப் க்ரூஸ் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன.
அமேசான் ப்ரைமில் இந்தியில் வெளிவந்த பஞ்சாயத்து-4, தெலுங்கில் வெளிவந்த கடிகாச்சலம், மராத்தியில் வெளிவந்த பரிவார், ஆங்கிலத்தில் வெளிவந்த கவுண்ட் டவுன்-1, ஆங்கிலத்தில் வெளிவந்த ஹவ் டூ ஹாவ் செக்ஸ் ஆகியவை வெளிவந்துள்ளன.
ஜியோ ஹாட் ஸ்டாரில், இந்தியில் வெளிவந்த மிஸ்ட்ரி ஆங்கிலத்தில் வெளிவந்த தி ப்ரூட்டலிஸ்ட், தி கில்டு ஏஜ்-3, அயர்ன் ஹார்ட்-1 ஆகியவை வெளிவந்துள்ளன.
ஜீ5 ஓடிடியில் தெலுங்கில் வெளிவந்த விராடபாலம், பெங்காலியில் வெளிவந்த பிபிசன் ஆகியவை வெளிவந்துள்ளன. சிம்ப்ளி சவுத் தளத்தில் தமிழில் வெளிவந்த அம்பி, மராத்தியில் வெளிவந்த லவ்லி ஆகியவை வெளியாகி உள்ளன.
ஹெச்பிஓ மேக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்த மை மாம் ஜேன் படமும், லயன்ஸ்கேட் ப்ளே தளத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்த க்ளீனர் படமும் வெளியாகி உள்ளன.
டெண்ட்கொட்டா தளத்தில் தமிழில் வெளிவந்த இவள், ஹுலு தளத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்த சர்வைவ் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன.
