தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து காட்டு பன்றி பாதிப்பில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான 5 ஆவது மாவட்ட அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும கண்காணிப்பு ( DISHA Committee) குழு கூட்டமானது நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசியதாவது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல துறைகள் சார்ந்த நிதிகளை மத்திய அரசு வழங்காமல் இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆஜ் யோஜனா கிராமப்புறங்களில் ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு மத்திய அரசு 1.20 லட்சம் ரூபாய் நிதி ஆதாரம் தருகிறது. அது குறைவாக உள்ளதால் அதை செயல்படுத்த முடியாமல் உள்ளது. நிதி நெருக்கடி இருந்த போதும் தமிழக அரசு கூடுதலாக நிதி வழங்கி 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மத்திய அரசு அதன் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என கடந்த காலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படாததால் மாநில அரசு கலைஞர் கனவு திட்டம் என்ற திட்டம் மூலம் 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஒரு லட்சம் வீடுகள் முடிக்கும் தருவாயில் உள்ளது.
கிராமம் சாலைகள் திட்டம் அதாவது ஏற்கனவே சாலைகள் இல்லாத இடத்தில் தான் சாலையில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 93 விழுக்காடு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதை சரி செய்ய வேண்டி உள்ளது. மத்திய அரசு சாலை ஒன்றிய திட்டம் படி அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்த திட்டத்திற்கு உண்டான நிதியை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு திட்டங்கள் நமக்கு செயல்படுத்த முடியாமல் உள்ளது.
அது மத்திய அரசு நிதி வழங்காமல் உள்ளதால் தான் மாநில அரசு இந்த நிதியை ஏற்றுக்கொண்டு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
காலநிலை மாற்றத்தால் வறட்சி ஏற்பட்டுள்ளது. காட்டு பன்றியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுப் பன்றி பாதிப்பில்லாத எந்த ஒரு மாவட்டமும் இல்லாமல் தமிழகம் இல்லை எனவும் அதற்கான மசோதா கொண்டு வந்தும் அதை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. கேரளாவில் வனவிலங்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை திருத்தி சட்டம் இயற்றி உள்ளனர் . இது மாநில அரசு மட்டும் தனியாக செய்யமுடியாது தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மாநில அரசு அதற்கான அங்கீகாரத்தை பெற முடியும் என தெரிவித்தார்.