நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை.

இந்த நிலையில், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீண்டும் தமிழக (மயிலாடுதுறை) மீனவர்கள் 9 பேரை  கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை  காங்கேசன் துறைமுக முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version