தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக அமைச்சர் சிவசங்கர், அரியலூரில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தி. பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எவ்வித திட்டமும் இல்லை. தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கான சூழ்நிலை ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்று போக்குவரத்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் இருக்காது” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version